உளறல்கள்...


கவிதைக்காகவே நீ என்னை நேசிக்கின்றாய்
உனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே
நான் கவிதையை நேசிக்கின்றேன்...!

°

நீ அருகில் இல்லா ஒவ்வொரு இரவும்
நிலவுக்குத் துணையாய் நான்...!

°
 
கன்னி இவள் மனசுக்குள்
காற்றே நுழைந்ததில்லை
காளை நீ நுழைந்ததினால்
கண்ணுறக்கம் சிறிதுமில்லை...!

°
 
நான் உன்னைப்  புரிந்து கொள்ள
உன் பல மொழி அவசியமில்லை
உன் இரு விழிகளே போதும்...!

°

உன்னை நினைத்தபடி உறங்கப் போகிறேன்
விழி உறங்கிய பின் விழிக்கிறது
உன் மேல் நான் கொண்ட ஆசை
தினமும் கண்ணீரிலே கரையும் என் இரவுகள்...!

°   
 
உன் வதனம் காண ஏங்கும் என் அகம்
உன் விழியைக் கண்டதும் தொலையும் என் எண்ணம்...!

°
 
என்னைப் படைத்து விட்டு...
என் மனதினில் காதலை விதைத்துவிட்டு...
இன்று என்னைத் தனியே தவிக்கவிட்டு...
இன்னும் எத்தனை நாட்கள் இந்த விளையாட்டு...?

°

உன் மௌனத்தால் என்னைக் கொன்றுவிடாதே...!
உன் மனதைவிட்டு என்றும் என்னைத் தள்ளிவிடாதே...!

°

பிரிந்து விடலாம் என
முடிவெடுத்த பின்னும்
பிரியமனமின்றி நிற்கின்றோம்
மௌனமாய்.................................
இனியும் எப்படிப் பிரிவது...???

°

காதலரைப்  பார்க்கையிலே - என்
காதலனே உன் நினைவு...!

°

என் கனவுக்குள் காலேடுத்து
வைத்தபோதுதான் தெரிந்தது
என் வாழ்வும் சந்தோஷமாய் இருப்பதாய்..!

°

என் உறக்கம் பறித்த விழிகள்
எங்கோ உறங்கிக்கொண்டிருக்கின்றது...!
 
°

என் காதலால் காயப்பட்ட உன் இதயத்திற்கு 
என் கண்ணீரால் மட்டுமே மருந்து பூச முடிக்கிறது...!
 
°

என்னை விட்டுப்போன என் சந்தோஷம்
என்னை சந்தோஷமாய் இருக்கச் சொல்லி கண்ணீர் வடிக்கிறது..!
 
°

உன்னோடு வாழ்ந்த ஞாபகங்கள் மட்டுமே
என் வாழ்வை வழி நடத்திச் செல்கிறது...!
 
°

உன்னால் என்னை விட்டு விலக முடியாதென்பது
உனக்கே தெரிந்தும் மீண்டும் ஏன் முயற்சி செய்கிறாய்...?
 
°
 
ஆரம்பத்தில் உன்னையே முழுதாய் பெற்ற என் காதலால்
இன்று உன் அன்பைக்கூட பெற முடியவில்லையே...! 

°

உன் வார்த்தைகளால் வாரி அணைத்து தூங்க வைப்பாய் என்னை
அந்த சுகத்திற்காகவே இரவை எதிர் பார்த்து காத்திருப்பேன்
இன்றும் காத்திருக்கின்றேன் அந்த சுகம் கிடைக்காத என்ற ஏக்கத்தோடு...!

°

இரவின் நிமிடம் மிக கொடுமையாய் உள்ளது
நீ என்னோடு இல்லாததனால் - இரவின் நீளம் குறைவு என்று
வருந்தியது உண்டு நான் - நீ என்னோடு இருக்கும் நாட்களில்..!

°

அங்கு நீ உறங்கி இருப்பாயா...? என்ற நினைவோடு
இங்கு நான் உறங்காமல்...!

°

உன் மூச்சோடும் பேச்சோடும் வாழ்ந்த நம் இரவுகளின் நினைவு
என் உயிரை வாட்டி வதைக்கிறது அந்த வலியை என் கண்கள் சுமக்கிறது...!

°

இந்த இரவு விடிவதற்குள் என் ஆயுள் முடிந்து விடுமோ என்று தோன்றுகிறது - உன்னை பிரிந்திருக்கும் இந்த வலியோடு சாகப் பிடிக்கவில்லை எனக்கு -நீ என் அருகில் இருக்கும் போது உன் அன்பான வார்தைகளையும் ஆழமான காதலையும் அழகான முகத்தையும் அனுபவித்த படியே என் உயிர் போக வேண்டும்...!

°

உன்னோடு பேசும் வேளைகளில் உறக்கம் வந்து இமைமூடும் கண்கள்
விடிந்ததும் கலங்குவேன் உறங்காமல் பேசியிருக்கலாம் என்று...!

இன்று உறங்காமல் விழித்திருக்கிறேன்
உன்னோடு பேசமுடியவில்லை என்று...!

°

எதெதற்கு என்ன தகுதி வேண்டும் என்று நான் அறிந்திருந்தேன்..
உன்னை மணப்பதற்கு எந்த தகுதியும் என்னிடமில்லாததால் வருந்தி நின்றேன்.

°

"காலம்"
வயதை கூட்டிக்கொண்டு ஓடலாம்.. 
வாழ்க்கையை மாற்றிப்போடலாம்..
காதல் காயத்தை கடுகளவும் மனதை விட்டு விரட்டுமா..?

°

"சந்தோஷம்"
எப்போதும் எந்நேரமும் எல்லோரும் எதிர்பார்ப்பது அதைத்தான்
உன்னோடு நான் வாழும் காலத்துக்கு தலைப்பும் அதுதான்.

°

"துரோகம்"
நீ என்னை விட்டு விலகிச் செல்வதில் இல்லையடா
நம் காதலை மண்ணுக்குள் புதைப்பதில் உள்ளதடா...!

°

"மோகம்"
ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றுகூடுவதில் தீர்வதில்லை அது
இரு உள்ளம் ஒன்று கூடியபின் உடல் இணைவதால் ஓடிவிடும் அது.

°

"காதல்காய்ச்சல்"
மாத்திரை / மருந்து உதவி புரியாது
காதலன் / காதலி அருள் புரிந்தால் மாறிவிடும்.

°

உன்னை பிரிந்திடும் ஒவ்வொரு நொடியும்
என்னை நெருங்கும் எனது மரணம்

°

என் உயிர் போகுதடா உன் பிரிவால்
என்னை விட்டு ஏன் எட்டி நிற்கிறாய்
உன்னை தொட்டுப் பார்க்கத்தான் நான் துடிக்கிறேன்

°

பிரிவு என்பது மரணத்தை விட கொடுமையாய் உள்ளதடா
என் உயிரை எடுத்துவிடு இந்தக் கொடுமையை தாங்க முடியவில்லை

°

உன் சொந்தங்களின் சந்தோஷம் நம் பிரிவிலா? என் இறப்பிலா?
இரண்டுமே ஒன்றுதான்...!

°

உன் மூச்சுக்கு மட்டுமல்ல, உன் பேச்சுக்கும் உள்ளதடா ஒரு ஸ்பரிசம்
அது என் மனதில் புகுந்ததடா இந்த நிமிஷம்...!

°

நீ இல்லா நொடிகள் தீண்டும் மன வலிகள் - அதை
உன்னிடம் கூற துடிக்கும் என் இதழ்கள்
உன் மடிமீது துயில தவிக்கும் என் தாகம்
நீ இல்லை என்றதும் மீண்டும் மீண்டும் கூடும் சோகம்

°

 விழி திறந்து பார்த்தேன், இது கனவென நினைத்தேன்
கண்மூடி சிரித்தேன், கற்பனையில் குளித்தேன்
உன் விரல்களின் ஸ்பரிசம் அறிந்தேன்
இது கனவல்ல நிஜமென்று திகைத்து நின்றேன்

°

மண்ணில் விழும் துளிகள்
என் மனதில் எழுகிறது
கவிதை ஒன்று எழுதச் சொல்லி என்னை தூண்டிடுது

°

காற்றின் வேகத்தில் அசைகிறது கிளைகள்
காதலின் வேகத்தில் இணைகிறது மனங்கள்
காலத்தின் வேகத்தில் பிரிகிறது உயிர்கள்

°

உன் காதல் முகம் பார்க்க ஏங்கும் உள்ளத்திடம்
சொல்கிறாய் "நான் அழகன் இல்லை" என

°

கண்ணை மூடி கனவில் விழுந்தேன்
கனவில் கூட உன் கரம் பிடித்தெழுந்தேன்

°

எத்தனை ஆசைகளைத்தான் சேர்த்து வைக்க முடியும்
இதயம் எனும் சின்னக்கூட்டில்

°

கண்ணீரும் ஓர்நாள் குலுங்கிக் குலுங்கி அழுதது
என் காதல் கதையைக் கேட்டபோது

°

என்னை விரும்பி அழைத்தாயே - இன்று ஏன்
வெறுத்துத் தள்ளுகிறாய்? தனிமை கேட்கிறது என்னை!

°

"இன்பத்தை பகிற தோழியில்லை" என்றாய் கவலையாய் - "இன்பத்தை
உன்னிடமிருந்து எடுத்துவிட்டேன் இனிக் கவலைப்படாதே" - சொல்கிறான் இறைவன்

°

மழையில் நனைய மறுக்கிறேன் நான்
எனக்குள் இருக்கும் நீ நனைந்துவிடுவாய் என்பதால்

°

சோகத்தை மறந்து சிரிக்கிறேன்
என்னுடம் பேசிக்கொண்டிருப்பது நீயாக இருக்கையில்

°

நான் பெண்ணென்பதை மறக்கிறேன்
என் கனவில் நீ வரும் வேளையில்

°

உறக்கத்தை வெறுத்தேன் உன்னிடம் பேசும் இரவுகளில்
அதையே நேசித்தேன் உன்னிடம் பேசாத பொழுதுகளில்

°

உறக்கத்தை மறந்து
உன்னிடம் பேசிக்கொண்டிருந்தேன் என் கனவில்

°

எத்தனை முத்தங்கள் தந்தாய் எண்ணிக்கையில் அடங்கவில்லை
முத்தமிட்ட தடமும் மேனியில் எங்குமில்லை அதுதான் புரியவில்லை

°

உனக்குக்  கிடைக்கவேண்டிய முத்தங்களை - உன் நிழல்படமே
பெற்றுக்கொள்கிறது அது தீர்ந்துவிடும் முன்பேனும் என் முன்னே வாடா

°

சூரிய ஒளியில் மலர்கள் மலருமாம் - சந்திர ஒளியில்
புற்கள் வளருமாம் - உன் நினைவால் நான் தேய்கிறேன்

°

"சீப்பு"
உன் துணையின்றி பெண்களின் கூந்தல்
கவிஞனின் வர்ணணைக்கு சென்றிருக்காது!

உனக்குத்தான் என் கூந்தலில் எத்தனை பெரிய ஆசை
வாரி இழுத்து அணைக்கின்றாயே!

°

"நிழல்படம்"
ஆடாத சிற்பம்போல்
என்னை என்றும் அசைய விடாமல் வைத்திருக்கிறாயே!

°

"நீர்துளி"
கண்ணை மூடி புற்தரையில் என் உறக்கம், கவிதை வரம் வேண்டி
என் மேல் விழுந்து உணர்தினாய், நீயே ஓர் அழகான கவிதையென்று!

°

"கிளை"
இலைகள் உதிர்ந்துபோனாலும்.. கனிகள் விழுந்துபோனாலும்
நன்றி மறவா நீ உயிர் தந்த மரத்தை விட்டுச் செல்ல மறுக்கின்றாய்!

°

"கொலுசு"
அழகாய் சிரித்து.. என் சிந்தையை மாற்றுகின்றாய்..
உன் ஒவ்வொரு தாளத்திலும் புது சுரம் காட்டுகின்றாய்!

°

"தாமரை"
நீருக்குள்ளே இருந்தாலும் அதன் துளி கூட ஒட்டாமல் வாழ்கிறாயே
உன்னைப்போல் வேண்டுமடி பெண்கள் - வாழ்வை தொலைக்காமல் இருக்க!

°

"எழுதுகோல்"
என் மனதை எழுத்துக்களாய் மாற்றும் என் நண்பன் நீ..!

என் உணர்வுகளை வார்த்தையாய் வரையும் உன்னை
என்றும் என் விரல்கள் மறவாது...!

°

"வண்ணம்"
உலகில் உள்ள அணைத்தையும் அழகு படுத்துகிறாய்
அதனால் உன் அழகுக்கு இன்னும் அழகு சேர்கின்றாய்...!

°

"சொப்பனம்"
ஒவ்வொரு மனிதனின் மனசின் பாதி நீ...!

°

எல்லோரும் இருந்தும் நான் தனிமையை அனுபவிக்கிறேன்
நீ என் அருகில் இல்லாததால்...!

°

நான் விழத்துடிக்கிறேன்
மண்ணுக்குள் அல்ல - உன் மனதுக்குள்...!

°

உன் தயவுடன் மனங்கள் கொஞ்சம் அமைதியாகட்டும்
யாரிடமும் செல்ல மறுக்காதே உறக்கமே..!

°

உன் நினைவு என்னிடம் சண்டை போடும் வேளைகளில்
இமை மூடாத உறக்கத்தை நான் தழுவிக்கொள்கிறேன்...!

°

என் ஒவ்வொரு நொடியிலும் உன்னை நான் நினைத்திருப்பதற்காக
என்னை மறந்து உறங்கும் தூக்கத்தை நான் தூரப்போடுகிறேன்...!

°

பிரிவு என்பது கொடுமை என்பதை - உன்னை
பிரிந்த போதுதான் நான் உணர்ந்தேனடா..!

°

பிரிவின் கொடுமை என்ன என்பது எனக்கு தெரியாமலே போயிருக்கலாம்
தெரிந்தாலும் அது உன்னால்தான் என்றாவது இல்லாமல் இருந்திருக்கலாம்!

°

சட்டென வந்து என்னை
அழைத்துச்செல் நீ...

"மரணத்திற்கு முன்பு"

°   

தாங்க முடிய துன்பம் என்னை தழுவிக்கொள்ளும்போது
யாரும் இல்ல திசையைத் தேடி ஓடும் எந்தன் பாதம்

°

விழிகளிலே கண்ணீர் ஊற்றெடுக்கும்போது
தாகம் தீரும் வரை நின்று அருந்திச்செல்லும் சோகம்

°

தள்ளாடி உடல் சாய்ந்து படுக்கையில் விழும்போது
என் தலைபாரம் குறைய சிந்தும் கண்ணீரால் ஏறும் தலையணைபாரம்

°

உறவுகள் சுற்றி இருந்தும்
தனிமையை மட்டுமே விரும்பும் என் நெஞ்சம்...
ஓயாமல் பேசிக்கொண்டே இருகின்றன தினமும்
என் மனதில் இருக்கும் உன் நினைவுகளுடன்...!

°
மார்கழி வரை காத்திருந்தும்
மாலை சூட நீ வரவில்லை…
மங்கை இவள் மாண்ட பின்பேனும்
மலர்கள் தூவ நீ வரவேண்டும்..!

°

உன்னை நினைத்துக் கொண்டே எழுதியதுண்டு
பல கவிதைகள் முன்னால்...!
உன்னை வெறுத்து எழுத முடியவில்லை,
ஒரு கவிதை கூட என்னால்...!

°

என் கடும் சோகத்திற்கு ஒரு வகையில் காரணம் நீ
சோகத்தோடே சென்ற என் வாழ்வில்
சந்தோஷத்தை காட்டி பாதியில் நீ சென்றதால்
சோகங்களும் கடுமையாய் தெரிகிறது..!

°
 
கள்ளமற்ற உன் இதயத்தை
கொள்ளை கொண்ட பாவத்திற்காய்
ஒண்றும் அறியா நம் காதல்
ஓஓஓவென்று அழுவதுவோ...?

°
உயிர் அற்றுக்கிடந்த காகிதமும்
உயிர் பெற்றது உன் ஓவியத்தால்...!

°

மார்கழியும் வந்தாச்சு...
வயதும் ஒன்று சேர்ந்தாச்சு...
நீ இல்லாமல் களிகிறதே - இளமையும்
என்று வெறுப்பாச்சு...!

°

உன்னிடம் உரையாடும் வேளைகளில்
வார்த்தைகளில் சந்தோஷம் வளியும் - என்
வாழ்கையில் சந்தோஷம் இல்லை என்பதால்
இரவில் கண்ணில் நீர் வளியும்

°

உனக்காக காத்திருந்து
உன்னோடு இணைத்தே தீரவேண்டும்
என எண்ணும் மனம் மாறும்
இரவில் நீ என் அருகில் இல்லை என்றதும்
இறக்க நினைத்து
 
°

மரணத்தை மலர் வைத்து அழைக்கிறேன்
உன் மாலை என் தோழ் சேராததால்
 
°

என் மனதிற்கு ஆறுதல் தரும்
ஒரே நன்பன் - என் தலையனை தான்
என் கண்ணீரை ஏந்திக்கொள்கிறது
 
°

என்னை நீ மறக்க வேண்டும் என
உன்னிடம் சண்டை பிடிக்கும் - என் இதயம்
நிதம் கண்ணீர் வடிக்கும்
உன்னை மறக்க முடியாமல்

°

விழி நீர் மட்டும் இல்லையென்றால்
என்னுள் அடைந்து கிடக்கும் - வேதனை
என்னை என்றோ கொண்றிருக்கும்
 
°

உள்ளத்தில் உதித்த கவிதை சம்பவங்களை சார்ந்தது
உதட்டால் உதிர்த கவிதை கற்பனையில் மலர்வது
 
°

கவலையில் துவண்டு போகும் போதெல்லம்
வெளியில் வந்து சோகத்தை துரைக்கிறது
"கண்ணீர்"
 
°

தூரம் நீ இருந்தால் என்ன
என் மனம் உன் அருகில் இருக்கு
துயரம் என்னை சுட்டால் என்ன
தண்ணீராய் உன் நினைவு இருக்கு
 
°

உன் நலமே அறியாமல்
என் நலமும் சரி இல்லையே
உன் குரலை கேளாது
என் வார்த்தைக்கும் மொழி இல்லையே
 
°

நீ இல்லா நொடிகள் தீண்டும் என்னை மனவலிகள் - அதை
உன்னிடம் கூர துடிக்கும் என் இதழ்கள்... 
என் தலைபாரம் ஏற என் தூக்கம் போக - உன்
மடிமீது உறங்க ஏங்கும் என் விழிகள்...
 
°