நீ என்னை வெறுக்க வெறுக்கத்தான்
உன் மீது நான் கொண்ட காதல் அதிகமாகிறது...
உனக்கு
என் மீதுள்ள வெறுப்பை விட
எனக்கு உன்மீதுள்ள காதல்
கோடி மடங்கு அதிகம் தெரியுமா உனக்கு?
இப்பொழுது உனக்கு
என் காதல் புரியாமல் போகலாம்...
ஆனால்
அது உனக்கு புரியும் நேரம் வரும்
அதுவரை இவ்வுலகில்
இருப்பேனோ தெரியவில்லை...
இவள்
இறந்தாலும் இவள் காதல்
இவ் வுலகை விட்டுப் போகாது...!
உன் விழிகள் காணும்
திசை எங்கும் இந்தப் பேதை இருப்பாள்...!
நீ ரசிக்கும்
அந்த நிலவாய்.. முகிலாய்.. வானமாய்..
மழையாய்.. மழைச்சிலையாய்.. மின்னலாய்..
மரமாய்.. இலையாய்.. பூவாய்.. காயாய்.. கனியாய்.. அவதரிப்பேன்...
உன் இதழ்களில் தவழும்
அந்தத் தமிழாய்.. கவியாய்..
உருவெடுப்பாள் இந்த மாது...
தென்றலாய்
வந்து உன் தேகம் தீண்டுவேன்...
நீராய் இருந்து
உன் மேனி நனைப்பேன்...
வானாய் மாறி
உனக்குக் குடை பிடிப்பேன்...
பூமியாய் தோன்றி
உன்னை நிதமும் தாங்குவேன்...
மெழுகாய் எரிந்து
உனக்கு ஒளிவீசுவேன்...
காலை
வணக்கம் சொல்ல சூரியனாய் வருவேன்...
மாலையில்
நீ கேட்கும் கீதமாய் வருவேன்...
இரவில்
உன்னைத் தூங்க வைக்க விண்மீனாய் வருவேன்...
உன் சேயாய் பிறந்து உனக்கு தாயாய் இருந்து
உன்னுடனே வாழ்வேன் அதுவே என் ஆசை...
அதற்காகவேனும்
என்னவனே நீ மணம் முடிக்க வேண்டும் ஒருத்தியை...
என் வேண்டுகோளை ஏற்று,
இன்றே சம்மதம் சொல்....
பதிலுக்காய் கத்திருக்கிறேன்......
இப்படிக்கு..
உன் காதலி