Sunday, April 25, 2010

* என் காதல்...
















என்னிடம் பேசும் போதெல்லாம்
என் காதலி பற்றியே நண்பன் கேட்பான்...

"அவள் எப்படி இருப்பாள்...?" என்றான்
"அமைதியும், அடக்கமும், அன்புமே
அவள் அழகை இன்னும் கூட்டும்" என்றேன்

"உண்மையாய் அவளைக் காதலிக்கிறாயா...?" என்றான்
"பொய்யில்லாமல் காதல் இல்லை,
ஆனால் என் காதல் பொய்யில்லை" என்றேன்

"அவளை நீ ஏமாற்றி விடமாட்டாயா..?" என்றான்
"அவள் என்னை ஏமாற்றினாலும் நான் மாட்டேன்" என்றேன்

"அவளை நானும் சந்திக்கலாமா..?" என்றான்
"நான் சந்திப்பதே மிகக்குறைவு" என்றேன்

"எப்பொழுது திருமணம்..?" என்றான்
"எப்போதோ ஆகிவிட்டது" என்றேன்

"எனக்கு நீ சொல்லவில்லையே.." கோபித்தான்
"நேற்றுத்தான் எனக்கே தெரியும்" மௌனித்தேன்

"என்னடா சொல்கிறாய்...?" பதறினான்
அவளுக்குத் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாம்..!

ஏதோ ஒரு கவிதையின் பாதிப்பில்....
-நிவேதா-

No comments:

Post a Comment