உன்னை நான் முதல் முதலில் சந்தித்தேன்
அரட்டை அறைக்குள் ஓர் அறிவாளியாய்
எதிர் பாராமல் ஆரம்பம் ஆனது நம் நட்பு
கனவிலேனும் எதிர் பார்க்கவில்லை
என் இரசனையில் ஒருவனை
என் ஆசையை - எண்ணத்தை - மனதை
மதிக்கும் ஒருவனை
கற்பனையும் வடிக்காத ஓர் கவிஞனை
கள்ளம் இல்லாத ஓர் மனிதனை
உன் நட்பு என்னைத் தொட்டதும்
நான் விண்ணைத் தொட்டுவிட்டேன்
காதல் எனக்குப் புரியவில்லை
நட்பின் எல்லையும் தெரியவில்லை
கூட்டுக்குள்ளே இருந்ததனால்
வெளி உலகம் அறியவில்லை
கூட்டை விட்டு வெளியில் வந்தேன்
ஏமாற்றங்கள் வாங்கிக் கொண்டேன்
எது நட்பு - எது காதல் -
அரட்டை அறைக்குள் ஓர் அறிவாளியாய்
எதிர் பாராமல் ஆரம்பம் ஆனது நம் நட்பு
கனவிலேனும் எதிர் பார்க்கவில்லை
என் இரசனையில் ஒருவனை
என் ஆசையை - எண்ணத்தை - மனதை
மதிக்கும் ஒருவனை
கற்பனையும் வடிக்காத ஓர் கவிஞனை
கள்ளம் இல்லாத ஓர் மனிதனை
உன் நட்பு என்னைத் தொட்டதும்
நான் விண்ணைத் தொட்டுவிட்டேன்
காதல் எனக்குப் புரியவில்லை
நட்பின் எல்லையும் தெரியவில்லை
கூட்டுக்குள்ளே இருந்ததனால்
வெளி உலகம் அறியவில்லை
கூட்டை விட்டு வெளியில் வந்தேன்
ஏமாற்றங்கள் வாங்கிக் கொண்டேன்
எது நட்பு - எது காதல் -
எது உண்மை - எது வாழ்கை
எதுவுமே அறிந்ததில்லை
யாரும் எனக்கு சொன்னதில்லை
மனதை புரிந்து கொண்டு
அன்பை அள்ளித்தந்து
நல்வழிக்கு அழைத்துச் செல்ல
உன்னைப்போல் நல்ல நண்பன்
எவருமே எனக்கிருந்ததில்லை
என் வாழ்வில் நீ வந்தாய்;
வாழ்க்கையை சொல்லித் தந்தாய்;
நல்லதை அறிமுகம் செய்தாய்;
கெட்டதை விளக்கிச் சொன்னாய்;இரசனைகளை பரிமாறினாய்;
ராதை என எனை மாற்றினாய்;
கணவன் என உன்னை ஏற்ற பின்பு
எதையுமே உனக்கு மறைத்ததில்லை
அதற்கு முன் நடந்ததெல்லாம் சத்தியமாய்
என் அறிவுக்கு எட்டி நான் செய்ததில்லை
எல்லாவற்றையும் புரிய வைத்தாய்
தப்பு எதுவென்று உணரவைத்தாய்
இன்று உனக்கானவளாய் நான் மாறிவிட்டேன்
ஆனால் நீதான் என்னை விட்டு விலகிவிட்டாய்
தப்பு செய்ய முதல் அது தப்பென்று தெரியவில்லை
அது தெரிந்தபோது என் வாழ்க்கை என்னிடம் இல்லை
கிடைத்த ஓர் உண்மையான
அன்பை நட்பை காதலை இழந்துவிட்டேன்
அதை நினைத்து இன்று தினமும் தூங்காமல் வாடுகின்றேன்
செய்த தப்பிற்கு வாழும் போதே தண்டனை தர எண்ணி
வாழ்கையையே பறித்து தண்டித்துவிட்டான் ஆண்டவன்
என்னை அந்த ஆண்டவனும் மன்னிப்பதாய் இல்லை
என் காதலனும் மன்னிப்பதாய் இல்லை
இருந்தும் காத்திருக்கிறேன்
யாராவது ஒருவர் என்னை மன்னிப்பார்கள் என்று
மன்னிப்பு வேண்டி காத்திருக்கிறேன் ஆண்டவனே
நீ என்னை மன்னிக்காவிட்டாலும்
வாழவைத்து என்னை தண்டித்துவிடாதே
உன்னிடம் அழைத்துவிடு என மன்றாடிக் கேட்கின்றேன்
அதற்காக இன்று பிரார்த்தைனை செய்கின்றேன்
அழைத்து விடு என்னை உன்னிடம்...............
யாரும் எனக்கு சொன்னதில்லை
மனதை புரிந்து கொண்டு
அன்பை அள்ளித்தந்து
நல்வழிக்கு அழைத்துச் செல்ல
உன்னைப்போல் நல்ல நண்பன்
எவருமே எனக்கிருந்ததில்லை
என் வாழ்வில் நீ வந்தாய்;
வாழ்க்கையை சொல்லித் தந்தாய்;
நல்லதை அறிமுகம் செய்தாய்;
கெட்டதை விளக்கிச் சொன்னாய்;இரசனைகளை பரிமாறினாய்;
ராதை என எனை மாற்றினாய்;
கணவன் என உன்னை ஏற்ற பின்பு
எதையுமே உனக்கு மறைத்ததில்லை
அதற்கு முன் நடந்ததெல்லாம் சத்தியமாய்
என் அறிவுக்கு எட்டி நான் செய்ததில்லை
எல்லாவற்றையும் புரிய வைத்தாய்
தப்பு எதுவென்று உணரவைத்தாய்
இன்று உனக்கானவளாய் நான் மாறிவிட்டேன்
ஆனால் நீதான் என்னை விட்டு விலகிவிட்டாய்
தப்பு செய்ய முதல் அது தப்பென்று தெரியவில்லை
அது தெரிந்தபோது என் வாழ்க்கை என்னிடம் இல்லை
கிடைத்த ஓர் உண்மையான
அன்பை நட்பை காதலை இழந்துவிட்டேன்
அதை நினைத்து இன்று தினமும் தூங்காமல் வாடுகின்றேன்
செய்த தப்பிற்கு வாழும் போதே தண்டனை தர எண்ணி
வாழ்கையையே பறித்து தண்டித்துவிட்டான் ஆண்டவன்
என்னை அந்த ஆண்டவனும் மன்னிப்பதாய் இல்லை
என் காதலனும் மன்னிப்பதாய் இல்லை
இருந்தும் காத்திருக்கிறேன்
யாராவது ஒருவர் என்னை மன்னிப்பார்கள் என்று
மன்னிப்பு வேண்டி காத்திருக்கிறேன் ஆண்டவனே
நீ என்னை மன்னிக்காவிட்டாலும்
வாழவைத்து என்னை தண்டித்துவிடாதே
உன்னிடம் அழைத்துவிடு என மன்றாடிக் கேட்கின்றேன்
அதற்காக இன்று பிரார்த்தைனை செய்கின்றேன்
அழைத்து விடு என்னை உன்னிடம்...............
No comments:
Post a Comment