Thursday, November 25, 2010

* காளை அவன் காதலினால்....

 
காளை அவன் காதலினால்
கண்ணுறக்கம் நான் தொலைத்து
கண்ணீரோடு வாழுகின்றேன்...!

கல்யாணம் ஆகவில்லை..
கணவனும் அருகிலில்லை..
கன்னி இவள் பெற்றெடுத்தாள்..
அழகான ஆண் குழந்தை...!

அள்ளி அணைக்கும் வேளையிலே
கைநழுவிப்போனதென்ன...?

இன்னும் இன்னும் எத்தனையோ
கனவாகிப் போன கதை...?
கற்பனையில் வாழ்ந்த கதை...?
 
 

No comments:

Post a Comment