* காதலெது காதலனே...???
காதலெது காதலனே
தெரியவில்லை எனக்கு
காதலென்ற பெயரால்த்தான்
சொந்தமானேன் உனக்கு
இதுதான் காதலென யாரும்
சொல்லவில்லை எனக்கு
இருந்தும் என்னைக் காதலியென்று
பரிந்துரைத்தேன் உனக்கு
காதலென்று சொல்லி நம் சொந்தம்
ஆரம்பமாகி பல நாட்கள் ஓடிவிட்டது
ஏனோ எனக்குள் இன்று
இந்தக்கேள்வி எழுந்துவந்தது
"காதல் என்றால் என்ன?"
என்ற கேள்வியைப் பின்தள்ளி வைப்போம்
உன்னாலே எனக்குள் உருவான மாற்றத்தை
சொல்லுகின்றேன் இப்போது..
நாம் பேசியது பழகியது
எப்போதும் என் நினைவில்
நீ வந்து தொடும் உணர்வு
வருகிறது என் கனவில்
ஒன்றாய் வளர்ந்த உறவைவிட
உன்மேல் அன்பு கோடி மடங்கு
ஒருநாளாவது உன்னோடு வாழ்ந்தால்
போதும் என்றது என் மனக்கிடங்கு
உனக்காக எதையும் இழக்கும்
மனமுண்டு என்னிடத்தில்
உன்னை நான் இழந்தால்
உயிரிருக்காது என்னிடத்தில்
உன்னைப் பிரிவதைவிட
இறந்துவிட எண்ணும் உள்ளம்
இறந்தாலும் வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னைப் பற்றிய எண்ணம்
எப்போதும் உன்னிடம் பேசவேண்டும்
என்ற ஆசைதான் அதிகம்
அந்த நினைவிலேயே
என் மனம் அலையும்
உன்னோடு எப்படியெல்லாம் வாழலாம்
என்ற கற்பனைகள் சுரக்கும்
என் எழுத்துக்களில் கூட
உணர்ச்சிகள் பிறக்கும்
உன்னை அனுபவிக்க வேண்டும்
என்று என் பெண்மை துடிக்கும்
வேறாருக்கும் என்னைத் தரமாட்டேன்
என்று அது அடம்பிடிக்கும்
வாழ்ந்தால் உன்னோடுதான்
என்று மனம் நினைக்கும்
அதுதான் இன்பமென்று
என் குரல் ஒலிக்கும்
"யாருக்கும் கட்டுப்படாதவள் - உன் அடிமை
ஆகிவிட்டாளே" என்று உள்ளம் சிரிக்கும்
"அன்போ.. திட்டோ.. வெறுப்போ.. கோபமோ.." எதுவேனும்
உன்னிடமிருந்து வந்தால் போதும் என உள்ளம் துடிக்கும்
இத்தனைக்கும் காரணம் காதலா?
காதலென்பது எதுவென்று தெரியாதபோது
இது காதல்தான் என்று சொல்வது யாரு?
இது காதலாகவே இருக்கட்டும்..
இல்லாமலும் போகட்டும்
எதுவாக இருந்தால் என்ன???
"நீயில்லாமல் என்னால் வாழமுடியாது!"
இதற்கு என்ன பெயர் இருந்தாலென்ன?
உன் மனைவியாய் உன்னோடு வாழ்ந்தால்போதும்.
அன்பான மனைவியாய் உனக்கு இருப்பேன்
நம்பிக்கை இருக்கிறது எனக்கு
இன்பமே என்றும் எம்மோடு வரும்
இறைவன் அருள் இருக்கிறது அதற்கு
எங்கள் வாழ்வின் போது
என்றேனும் ஓர்நாள்
இதுதான் காதல் என
எமக்குத் தெரியவரும்
அப்போது சொல்கின்றேன்..
"நான் உன்னைக் காதலிக்கிறேன் காதலனே..!"
No comments:
Post a Comment